Pagetamil
குற்றம்

மாங்குளத்தில் ‘கெட்ட பையன்’ வட்ஸ்அப் குழு நடத்திய இருவர் கைது!

மாங்குளம் பகுதியில் ‘Bad Boy’  என்ற வட்ஸ்அப் குழுவொன்றை கண்காணித்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், அந்த வட்ஸ் அப் குழுவின் செயற்பாட்டாளர்கள் இருவரை கைது செய்து மாங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நேற்று முன்தினம் (06) மாங்குளம் நீதிபரம் பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்கள் மாங்குளம் முகாமின் சிறப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு இளைஞர்களுக்கும் நிரந்தர தொழில் இல்லை எனவும், கூலி வேலையில் ஈடுபடுவதாகவும், இதேபோன்ற இளைஞர்களை இந்த குழுவில் இணைத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த வாட்ஸ்அப் குழுவில் வன்முறைச் செயல்கள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பரிமாறப்படுவதாகவும், வாள்கள் மற்றும் கம்புகளை ஏந்திய இளைஞர்களின் புகைப்படங்களும் பரிமாறப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டுக் கும்பல்களை போல மாங்குளத்தில் வாள்வெட்டு குழுக்களை ஒழுங்கமைக்கும் நோக்கில் அல்லது யாழ்ப்பாண வாள்வெட்டு குழுக்களுடன் இவர்கள் இணைந்து செயற்படுகின்றனர் என்ற பலத்த சந்தேகத்தின் காரணமாக இந்த இரு சந்தேக நபர்களையும் விசேட அதிரடிப்படையினர் கைது செய்திருந்தனர்.

அதன்படி இந்த இளைஞர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெளிநாடு சென்ற காதலன் தொடர்பு கொள்ளாததால் இளம்பெண் விபரீத முடிவு

Pagetamil

வவுனியா சிறைச்சாலை கூடா நட்பு: கணவனின் நண்பனுடன் பியர் குடித்த பின் நடந்த கொடூரம்!

Pagetamil

யாழ் யுவதியை பேய் கடத்தியதா?: பொலிசார் திண்டாட்டம்!

Pagetamil

போலி விசாவில் ஜேர்மனி செல்ல முயன்ற யாழ் நபர் சிக்கினார்!

Pagetamil

வீடு உடைத்து பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்கி கொள்ளையடித்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

Leave a Comment