27.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
உலகம்

நட்சத்திர ஹொட்டலில் மதுபான போத்தல்களை திருடிய அழகிக்கும், காதலருக்கும் சிறைத்தண்டனை!

நட்சத்திர ஹொட்டலில் இருந்து 1.4 மில்லியன் யூரோ மதுப்போத்தல்களை திருடிய மெக்சிகோ நாட்டின் அழகிக்கும், காதலருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் 2021 ஆம் ஆண்டு ஸ்பெயினின் கேசர்ஸ் நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த போது நிகழ்ந்தது.

ஸ்பெயினின் தென்மேற்கு பகுதியில் உள்ள கேசர்ஸ் நகரில் பிரபல நட்சத்திர ஹொட்டலில் 19ஆம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட 310,000 யூரோ மதிப்புடைய வைன் மதுபான போத்தல் உள்பட பல பழமையான மதுபான போத்தல்கள் இரகசிய அறையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் மெக்சிகோ நாட்டின் முன்னாள் அழகியான பிரிசிலா லாரா குவேரா என்பவர் தனது காதலர் கான்ஸ்டன்டின் கேப்ரியல் டுமித்ருவுடன் சேர்ந்து ஸ்பெயின் ஹொட்டலில் இருந்து, பழமையான வைன் மதுபான போத்தல்களை திருட திட்டம் தீட்டினார். இதற்காக தனது காதலருடன் 3 முறை அந்த ஹொட்டலுக்கு சென்று, திருட்டுக்கு ஒத்திகை பார்த்தார்.

இறுதியாக கடந்த 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அந்த ஹொட்டலுக்கு சென்ற பிரிசிலா மற்றும் டுமித்ரு அங்கு அறை எடுத்து தங்கினர்.

நள்ளிரவில் ஹொட்டலின் சமையலாளரிடம் தமக்கு உணவு தேவையென கேட்டனர். அவர் உணவு தயாரிக்கும் சமயத்தில், இரகசிய அறையின் சாவியை திருடிக் கொண்டு, மதுப்போத்தல்கள் வைக்கப்பட்டிருந்த இரகசிய அறையின் சாவியை திருடிக்கொண்டு அங்கு சென்றார்கள்.

ஆனால் அங்கு சென்ற பின்தான் தவறான சாவியை எடுத்து வந்தது தெரிய வந்தது. மீண்டும் வரவேற்பு அறைக்கு சென்றபோது, ஊழியர் உணவுடன் அங்கு வந்தார். அவருடன் காதலர் பேசி கவனத்தை திருப்பிக் கொண்டிருக்க, காதலி கைவரிசை காட்டினார்.

உணவு ஊழியருக்கு போக்கு காட்டுவதற்காக, அவரிடமிருந்து 14 வகையான உணவை ஓர்டர் செய்து பெற்றுக்கொண்டுள்ளனர்.

மெக்சிக்கோ அழகி இரகசிய அறைக்குள் நுழைந்து 45 மதுப்போத்தல்களை பெரிய பையில் போட்டு தனது அறைக்கு எடுத்து சென்றார்.

பின்னர் மறுநாள் அதிகாலை எதுவும் நடக்காததுபோல் இருவரும் ஹொட்டல் அறையை காலி செய்துவிட்டு சென்றனர்.

வழக்கம் போல் மதுப்போத்தல்களை சரிபார்ப்பதற்காக ஊழியர்கள் இரகசிய அறைக்கு சென்றபோது மதுப்போத்தல்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

ஹொட்டலின் கண்காணிப்பு கமராக்களை ஆய்வு செய்தபோது பிரிசிலா மற்றும் டுமித்ரு திருட்டில் ஈடுபட்டது அம்பலமானது. சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு வங்கி கொள்ளைக்கு இணையாக நேர்த்தியாக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இந்த திருட்டு சம்பவம் அப்போது சர்வதேச பத்திரிகைகளில் தலைப்பு செய்தியானது.

இதையடுத்து, நாட்டை விட்டு தப்பி ஓடிய பிரிசிலா மற்றும் டுமித்ருவை சர்வதேச நாடுகளின் உதவியுடன் ஸ்பெயின் தேடியது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் குரேஷியாவில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஸ்பெயினுக்கு நாடு கடத்தப்பட்டு, வழக்கு விசாரணையை எதிர்கொண்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை கேசர்ஸ் நகர நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடந்தது. விசாரணையின் முடிவில் பிரிசிலாவுக்கு 4 ஆண்டுகளும், டுமித்ருவுக்கு 4½ ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் அவர்கள் இருவரும் சம்பவம் நடந்த ஹொட்டலுக்கு 750,000 யூரோ இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ட்ரம்ப் தடை

east tamil

விற்ற வீட்டில் புது ஓனருக்கு தெரியாமல் 7 ஆண்டுகள் வாழ்ந்த கில்லாடி பெண்

east tamil

இஸ்ரேலும் மனித உரிமை ஆணைக்குழுவில் இருந்து விலகல்

east tamil

யூதர்களுக்கு ஆதரவாக மனித உரிமை பேரவையில் இருந்து விலகிய அமெரிக்கா

east tamil

திருநங்கைகள் விளையாட்டில் பங்கேற்க தடை – ட்ரம்ப்

east tamil

Leave a Comment