சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்தன!

Date:

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்ததன் காரணமாக பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

செரண்டிப் மற்றும் பிரிமா மாவு நிறுவனங்கள் இன்று முதல் தமது கோதுமை மாவின் விலை கிலோ ஒன்றுக்கு 15 ரூபாவினால் குறைக்கப்படும் என அறிவித்துள்ளன.

இதேவேளை, இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைவதன் விளைவாக இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் மொத்த விலையில் சுமார் 10% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இறக்குமதி செய்யப்படும் சீனி, பருப்பு மற்றும் வெங்காயத்தின் மொத்த விலைகள் ஒரு கிலோகிராம் 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

450 கிராம் பாண் ஒன்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ளது.

இன்று (08) நள்ளிரவு முதல் 450 கிராம் பாணின் விலை 10.ரூபாவால் குறைக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL)...

தமிழ் தேசம் ஜோதிலிங்கம் ஐயாவை இழந்துவிட்டது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆழ்ந்த இரங்கல்

ஆசிரியர், வழக்கறிஞர், அரசியல் ஆய்வாளர் என்ற எல்லைகளைத் தாண்டித் தமிழ் தேசத்தின்...

அனோஜனின் உயிரைக் காக்கப் பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்