25.1 C
Jaffna
January 8, 2025
Pagetamil
கிழக்கு

மாணவனின் மதிய உணவில் நாய் மருந்தை கலந்த சக மாணவர்கள் 6 பேர்: வைத்தியசாலையிலிருந்து மன்னித்த மாணவன்!

சேருநுவர பிரதேசத்தில் ஏழாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் மதிய உணவில் நாய்களுக்கு வழங்கப்படும் மருந்தை கலந்ததாக கூறப்படும் ஆறு மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என நோய்வாய்ப்பட்ட மாணவனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறானதொரு செயலைச் செய்த ஆறு மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து நோயுற்ற மாணவனின் பெற்றோர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த மாணவன் தன்னுடன் ஒரே வகுப்பில் கல்வி கற்கும் ஆறு மாணவர்களையும் மன்னிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாய்களுக்கு வழங்கப்படும் மருந்தை மாணவனின் மதிய உணவில் கலந்ததாக கூறப்படும் ஆறு மாணவர்களையும் பொலிஸாரை அழைத்து எச்சரித்தால் போதும் என நோய்வாய்ப்பட்ட மாணவனின் பெற்றோர் பொலிஸாரிடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வாழைச்சேனையில் கசிப்பு வேட்டை

Pagetamil

கிழக்கு மாகாண சுற்றுலா துறையை மேம்படுத்த முயற்சி

east tamil

திருகோணமலையில் சதுப்புநிலங்கள் பாதுகாத்தல் தொடர்பான செயலமர்வு

east tamil

மட்டக்களப்பின் சுற்றுலா துறையை வலுப்படுத்தும் பணிகள் ஆரம்பம்

east tamil

கேரளா கஞ்சாவுடன் 34 வயதுடைய சந்தேக நபர் கைது

Pagetamil

Leave a Comment