நிலவும் போக்கு காரணமாக பஸ் கட்டணத்தை குறைக்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கெமுனு விஜேரத்ன, வருடாந்த பஸ் கட்டண திருத்தம் எதிர்வரும் ஜூலை மாதம் இடம்பெறும் போது கண்டிப்பாக பஸ் கட்டணத்தை குறைக்க முடியும் என குறிப்பிட்டார்.
ரூபாய் மதிப்பு உயர்வால் உதிரி பாகங்களின் விலை குறையும் என்றும், உலக சந்தையில் பட்டரிகள் மற்றும் பல வாகன உதிரிபாகங்களின் விலைகள் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜூலை மாதம் பஸ் கட்டணத்தை தீர்மானிக்கும் போது இந்த காரணிகள் கருத்தில் கொள்ளப்படும் என கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.
குறுகிய காலத்தில் ஒரு லிட்டர் டீசல் விலையை ரூ.10 குறைத்தால் பேருந்து கட்டணத்தை மேலும் குறைக்கலாம் என்றார்.
விஜேரத்ன மேலும் கூறுகையில், அண்மைய வாரங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசியல் ரீதியில் நடத்தப்பட்ட பேரணிகளினால் பஸ் தொழிற்துறையும் பாதிக்கப்பட்டதாக கூறினார்.