27.5 C
Jaffna
December 22, 2024
Pagetamil
இந்தியா

நித்தியானந்தாவின் புதிய பக்தை விஜயப்ரியா யார்?

நித்தியானந்தாவின் பக்தை விஜயப்ரியாவை பற்றி இணையத்தில் தேடிப்பார்ப்பவர்களின் தொகை அதிகரித்துள்ளது.

கர்நாடகாவைத் தலைமையிடமாகக் கொண்டு பிடதியில் ஆசிரமம் அமைத்த நித்தியானந்தாவிற்கு கர்நாடகாவில் ஏராளமான சீடர்கள் உள்ளனர். இவர் மீது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடத்தல், குழந்தைகளைச் சட்டவிரோதமாக அடைத்தல், பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பதிவான பலாத்கார வழக்குகளையடுத்து, தலைமறைவான நித்யானந்தா, வெளிநாட்டிற்கு தப்பியோடி விட்டார்.

பின்னர் கைலாசா என்று ஒரு நாட்டை உருவாக்கி கொண்டுள்ளதாக கூறிக்கொண்டு தலைமறைவாக வாழ்கிறார். தனது நாட்டுக்கு கொடி, கடவுச்சீட்டு என அவ்வப்போது அவர் வெளியிடும் அறிக்கைகள்தான் பலருக்கு எண்டர்டெயின்மென்டாக இருந்து வருகிறது.

கடந்த பெப்ரவரி 22ஆம் திகதி ஜெனீவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான 19 வது மாநாட்டின் 73 வது கூட்டம் நடைபெற்றது. இதில் கைலாசா நாட்டின் பிரதிநிதியாக மா.விஜயபிரியா நித்யானந்தா கலந்து கொண்டார்.

அங்கு பேசும் போது அவர் நித்யானந்தா தனது தாய்நாட்டால் வேட்டையாடப்படுவதாக குற்றம் சாட்டினார். பின்னர் ஐக்கிய நாடுகள் சபையில் தனது அறிக்கை “தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, வேண்டுமென்றே திரிக்கபட்டு உள்ளது என்றும் ஊடகங்களின் சில இந்து எதிர்ப்பு பிரிவுகளால் சிதைக்கப்படுகிறது” என்று விஜயபிரியா நித்தியானந்தா கூறி இருந்தார்.

ஐநாவில் நடைபெறும் இவ்வாறான கூட்டங்களில் அமைப்புக்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், அதை பயன்படுத்தி நித்தி கும்பல் விளையாடி விட்டது. இதை தாமதமாக புரிந்து கொண்ட ஐ.நா அந்த அறிக்கையை நீக்குவதாக அறிவித்தது.

இந்த சம்பவத்தின் பின்னர், யார் இந்த விஜயபிரியா என எல்லோருக்கும் கேள்வி எழுந்தது. கனடா பல்கலைக்கழகம் ஒன்றில் நுண்ணுயிரியலில் விஜயப்பிரியா பட்டம் பெற்று உள்ளார். தனது சமூகவலைதளத்தில் வாஷிங்டன் டிசியை சேர்ந்தவர் என குறிப்பிட்டு உள்ளார்.

பிரெஞ்சு, கிரியோல் மற்றும் பிஜின் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். அவரது பூர்வீகம் பிஜி தீவுகள் என கருதப்படுகிறது.

ஒருபக்கம் தன்னை கைலாசத்தில் வசிப்பவராக காட்டிக் கொள்ளும் விஜயப்ரியா, ரூத்ராட்சம், சேலை என மினுப்பாக இருக்கிறார். மற்றொரு பக்கம், வாஷிங்டனில் வெஸ்டர்ன் ஆடைகளில் இருக்கும் புகைப்படங்களையும் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

லிங்கிடின் அக்கவுண்டில் அவரை பற்றி தேடினால் சில தகவல்கள் கிடைத்தன. லிங்க்டின் தகவலின்படி, விஜயப்ரியா 2014ஆம் ஆண்டு கனடாவின் மனிடோபா பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியலில் இளங்கலை அறிவியல் முடித்திருக்கிறார். இவருக்கு ஆங்கிலம், பிரஞ்சு, கிரியோல், பிட்ஜின்களில் புலமை உள்ளது. 2022ஆம் ஆண்டு நித்தியானந்தா விஜயபிரியாவை கைலாசாவின் ஐநாவுக்கான தூதராக நியமித்து சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேடப்படுகிற குற்றவாளியான நித்தியானந்தாவின் உருவத்தை தனது கைகளில் பச்சை குத்தியபடியே ஐ.நா கூட்டத்தில் உரையாற்றியுள்ளார்.

எனக்கு பிடித்த நித்தியானந்தா என விஜயபிரியா நித்யானந்தாவை புகழ்ந்து தற்போது பேஸ்புக்கில் கவிதையும் எழுதி உள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றிய பெண்: 19 வயது இளைஞருடன் ஓட்டம்

Pagetamil

இன்ஸ்டா காதலால் விபரீதம்: நீரில் மூழ்கி 3 பேர் பலி!

Pagetamil

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

Pagetamil

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் கைது

Pagetamil

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

Leave a Comment