11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பின்னவல புதுகடுவ தமிழ் மகா வித்தியாலய அதிபரை பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட அதிபர், அண்மையில்ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் வரை வேறு பாடசாலைக்கு மாற்றப்பட்டார்.
குறித்த சந்தேகநபர் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும், சிறுமி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்குரிய 50 வயதுடைய அதிபர் பலாங்கொட அல்லராவ பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1