புதிய பொலிஸ்மா அதிபர் பதவிக்கு மும்முனை போட்டி தொடங்கியுள்ளது.
பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன ஆகியோருக்கிடையில் இந்த மும்முனைப் போட்டி நிலவுகிறது.
தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தனது சேவையை முடித்து இம்மாதம் 20ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் பதவிக்கு மேற்படி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் சார்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தனித்தனியான சந்தித்து பல சிரேஷ்ட அமைச்சர்கள் சிபார்சு செய்துள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



