ஊடகங்களை அனுமதிக்காத அரச அதிபர் – முடிவு எடுப்பது நான் எனக்கூறி ஊடகங்களை அழைத்த அமைச்சர்

Date:

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்தி முன்னாயத்தக் கலந்துரையாடலுக்கு ஊடகங்களை உள்ளே அனுமதிக்காது புறக்கணித்தார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உடனடியாக ஊடகவியலாளர்களை உள்வருமாறு அழைத்தார்.

இந் நிலையில் கடந்த காலங்களில் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டங்களுக்கு ஊடகவியலாளர்களை அனுமதிப்பது வழமை ஆனால் தற்போதைய அரச அதிபர் அனுமதிக்காமை தொடர்பில் அமைச்சரிடம் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், ஊடகங்களை அரச அதிபர் அனுமதிக்காமை தொடர்பில் எனக்கு முன்கூட்டியே தெரியாது தெரிந்திருந்தால் உடனடி நடவடிக்கை எடுத்திருப்பேன்.

யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் நான் தான் கூட்டத்துக்கு ஊடகவியலாளர்களை அனுமதிப்பது தொடர்பில் நான் தான் முடிவு எடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரானில் நடந்த மக்கள் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததை பகிரங்கமாக்கிய ட்ரம்ப்!

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடந்த மாபெரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை விதிப்பு

​சாத்​தான்​குளம் தந்​தை, மகன் கொலை வழக்​கில் குற்றவாளி​கள் 9 பேருக்​கும் மரண...

இந்த வாரம் முதல் புதன் விடுமுறை இரத்து!

இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், புதன்கிழமைகளில் வழங்கப்பட்ட அரச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்