சட்ட விரோத கடற்றொழிலை கட்டுப்படுத்த தொண்டர் அணி: அமைச்சர் டக்ளஸ்!

Date:

சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படுவதை விரைவுபடுத்தும் நோக்கில் தொண்டர் அணி ஒன்றினை உருவாக்க உள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பாக இன்று(02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

எமது கடல் பிரதேசங்களில் பல்வேறு வகைகளில் பலதரப்பட்ட முறைகேடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாளாந்தம் அறியக்கிடைக்கின்றது.

இவற்றை கட்டுப்படுத்த கடலோர காவல் படையினர் செயற்பட்டு வருகின்ற போதிலும் அவர்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில், உருவாக்கப்படவுள்ள இந்த தொண்டர் அணி செயற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் யாழ் மாவட்டத்தின் சில கிராமங்களில் கஞ்சா மற்றும் ஹரோயின் வியாபாரம் குடிசை தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பிரதான பாடசாலைகளின் முன்பாக திடீரென தோன்றி மறைகின்ற கச்சான் மற்றும் சிற்றுண்டி வியாபாரிகள் தொடர்பாக அவதானம் செலுத்த வேண்டும் என்று இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு முன்னாயத்த கூட்டத்தில் அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

போதைப் பாவனைப் பரவலைக் கட்டுப்படுத்த பொலிஸாரின் சிவில் பாதுகாப்புக் குழுக்களைப் பலப்படுத்தி பிரதேச ரீதியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் இதற்காக நீதியமைச்சரோடு பேசி சட்டம், நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து, புனர்வாழ்வு மையங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதனடிப்படையில் போதைப்பொருள் பாவனை உட்பட சட்டவிரோத செயற்பாடுகள் போன்ற பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டத்தில் பொலிசாருக்கு தான் பணித்திருந்ததாகவும் கூறியதுடன் இந்த செயற்பாடு பேச்சளவில் இருந்துவிடாமல் செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கோட்டாவின் கூட்டாளியின் புதுப்புது கண்டுபிடிப்புக்கள்!

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்...

ஈரானில் நடந்த மக்கள் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததை பகிரங்கமாக்கிய ட்ரம்ப்!

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடந்த மாபெரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்