ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் பதிவு மற்றும் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை உயர்த்தி வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் முதல் பதிவுக்கான 15,000 ரூபா கட்டணம் 50,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணம் 10,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
உரிமம் காலாவதியான முதல் மாதத்தில் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் தாமதக் கட்டணம் ரூ.10,000 ஆகவும், உரிமம் காலாவதியான 31 முதல் 90 நாட்களுக்குள் ரூ.25,000 ஆகவும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
90 நாட்களுக்கு மேல் பதிவு காலதாமதமாக இருந்தால், தாமதக் கட்டணம் 35,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், இந்த கட்டண திருத்தம் கடந்த ngப்ரவரி 20ஆம் திக்தி முதல் அமலுக்கு வருகிறது.



