யாழ் மாநகரசபைக்கு புதிய முதல்வரை தெரிவு செய்வதா அல்லது பிரதி முதல்வரின் தலைமையில் எஞ்சிய சில நாட்களை கழிப்பதா என்பது இன்று காலையில் தீர்மானிக்கப்படும்.
யாழ் மாநகரசபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நேற்று தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து, இ.ஆனோல்ட் இரண்டாவது தடவையாகவும் பதவியிழந்தார்.
இதையடுத்து, உள்ளூராட்சி சட்டவிதிகளின்படி புதிய முதல்வர் தெரிவு செய்யப்பட வேண்டும்.
புதிய முதல்வர் தெரிவு, 14 நாட்கள் அவகாசத்தில் நடைபெற வேண்டும். எனினும், உள்ளூராட்சி ஆணையாளரின் அறிவிப்பு வெளியாகி 7 நாட்கள் அவகாசமளித்த பின்னரே தெரிவு நடைபெற வேண்டும்.
புதிய முதல்வர் தெரிவுக்கான அறிவித்தல் இன்று விடுக்கப்பட்டாலும், 7ஆம் திகதியின் பின்னரே புதிய முதல்வர் தெரிவு நடத்தலாம்.
எனினும், மார்ச் 16ஆம் திகதியுடன் உள்ளூராட்சிசபைகளின் ஆயுட்காலம் நிறைவடைந்து விடும். ஒரு சில நாட்களிற்காக புதிய முதல்வர் தெரிவு செய்யப்படுவாரா அல்லது தற்போதைய பிரதி முதல்வரின் தலைமையில் மாநகரசபை இயங்குமா என்பத இன்று காலையில் தீர்மானிக்கப்படும்.



