“எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது”: மிஷ்கின் குறித்து லோகேஷ் கனகராஜ்

Date:

“உங்களுடன் பணியாற்றும் வாய்ப்பை பெற்றமைக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும், அது போதாது” என இயக்குநர் மிஷ்கின் உடன் ‘லியோ’ படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரைத் துறையின் உச்ச நடிகர்களில் ஒருவரான விஜய் நடிப்பில் ‘லியோ’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு பணிகள் காஷ்மீரில் நடைபெற்று வருகின்றன. இதில் இயக்குநர் மிஷ்கின் நடித்துள்ளார். இந்தச் சூழலில் அவருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

“உங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்றமைக்கு நான் நன்றி உள்ளவனாகவும், அதிர்ஷ்டம் செய்தவனாகவும் உணர்கிறேன். இந்த உணர்வை வெளிப்படுத்த எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது. இருந்தாலும் மில்லியன் நன்றிகள் சார். நீங்கள் செட்டில் இருந்த தருணம் அற்புதமானதாக இருந்தது” என லோகேஷ் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கோட்டாவின் கூட்டாளியின் புதுப்புது கண்டுபிடிப்புக்கள்!

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்...

ஈரானில் நடந்த மக்கள் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததை பகிரங்கமாக்கிய ட்ரம்ப்!

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடந்த மாபெரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்