யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கான வழக்கை மே மாதம் 8ம் திகதி தவணையிட்டு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜனவரி 15 ஆம் திகதி ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகளின் வழக்கு விசாரணை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் இன்று (28)இடம்பெற்றது.
இதன்போது வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர் சங்க செயலாளர் , பல்கலைக்கழக மாணவர் ஆகியோர் ஆஐராகியிருந்தனர்.
மேலும் சில சந்தேக நபர்களை வழக்கில் இணைக்கப்படவிருப்பதால்
பதில் நீதவான் தவபாலன் வழக்கை மே மாதம் 8ஆம் திகதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
குறித்த வழக்கில் சட்டத்தரணி க.சுகாஷ் எதிராளிகள் சார்பில் ஆஜரானார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1