யாழ் மாநகரசபையின் வரவு செலவு திட்டம் சமர்ப்பிப்பதில் தாமதம் நிலவுகிறது.
இன்று காலை 9 மணிக்கு விசேட கூட்டம் நடத்தப்படுமென முதல்வர் அறிவித்திருந்தார். வரவு செலவு திட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள், அவர்களின் கட்சித் தலைவர்களிற்கு டிமிக்கி கொடுத்து விட்டு வருவதற்கான வாய்ப்பாக இந்த கூட்டம் அறிவிக்கப்பட்டதாக அப்போதே, எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.
இன்று இந்த கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. வெறும் 10 நிமிடம் நடந்த இந்த கூட்டத்தில் எந்த குறிப்பிடக்கூடிய தீர்மானங்களும் எட்டப்படவில்லை. கடந்த கூட்ட அறிக்கைகளை அங்கீகரிப்பதாக கூறப்பட்டு, 10 நமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டது.
9.30 மணிக்கு வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படுமென கூறப்பட்ட போதும், இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை.
வரவு செலவு திட்டத்திற்கு ஆதரிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை போதாததால், ஏனைய தரப்பினருடன் பேச்சு நடத்துவதால் வரவு செலவு திட்டம் தாமதிக்கப்படுவதாக கருதப்படுகிறது.




