நேற்று புதன்கிழமை (21) மாலை உடரட மெனிகே விரைவு ரயிலில் பயணித்த சுற்றுலாப் பயணியான வெளிநாட்டு பெண் ஒருவரை தனது செருப்பால் தாக்கியதாகக் கூறப்படும் இளைஞன் ஒருவர் பண்டாரவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரயில் பாதையில் நின்று கொண்டிருந்த சந்தேக நபர், ரயில் கால்மிதியில் பயணம் செய்து மகிழ்ந்த பெண் சுற்றுலாப் பயணி மீது தனது செருப்பை வீசியதாக போலீசார் தெரிவித்தனர்.
செருப்பு மற்றொரு பெண்ணின் முகத்தை தாக்கியது. இந்த அசிங்கமான சம்பவம் சமூக வலைதளங்களில் உடனடியாக வைரலானது.
இந்த சம்பவத்தை சமூக ஊடகங்களில் அவதானித்த பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் கலுபஹன, குற்றவாளியை கைது செய்யுமாறு பண்டாரவளை, ஹப்புத்தளை மற்றும் தியதல்வ பொலிஸ் நிலையங்களுக்கு பணிப்புரை விடுத்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேக நபர் பண்டாரவளை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் பண்டாரவளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பண்டாரவளையில் இருந்து எல்ல பாதையில் ரயிலில் பயணித்த வெளிநாட்டு பெண் மீது செருப்பு வீசி தாக்கிய 27 வயதுடைய சந்தேக நபர் பண்டாரவளை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். pic.twitter.com/WbriJa9mB3
— Pagetamil (@Pagetamil) February 23, 2023