அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் தெரிவித்தார்.
அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்வதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “பொதுக் குழு செல்லும் என்று தான் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தீர்மானங்கள் செல்லும் என்று கூறவில்லை. நாங்கள் தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். இது எங்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை. முழு தீர்ப்பை பார்த்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்.” இவ்வாறு அவர் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1