இரண்டாம் உலகப் போரின் போது, போலந்து நாட்டிலிருந்து தப்பிச் சென்ற குடும்பமொன்று, 80 ஆண்டுகளின் பின்னர் வீட்டில் புதைத்து வைக்கப்பட்ட புதையலை கண்டுபிடித்துள்ளனர்.
தப்பிச் சென்ற ஒருவர் தென்னாபிரிக்காவில் உயிரிழந்த போது, தனது கையால் வரைந்த வரைபடமொன்றை மகனிடம் வழங்கியிருந்தார். அந்த வரைபடத்தின் உதவியுடன் புதையல் மீட்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1, 1939 அன்று ஜெர்மனி போலந்து மீது படையெடுத்தது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இரண்டாம் உலகப் போர் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. ஆனால் கிழக்கு போலந்தில் உள்ள ஆடம் கிஸாஸ்கியின் குடும்ப தோட்டத்தில் போர் பற்றிய பரபரப்புக்கள் இருக்கவில்லை.
செப்டம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தினர் மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தது, ஒரு வானொலி செய்தி அந்த குடும்பத்தின் வாழ்க்கையையும் தலைகீழாக புரட்டிப் போட்டது.
ஒளிபரப்பு ஆங்கிலத்தில் இருந்தாலும், கிஸாஸ்கியின் சகோதரர்களில் ஒருவர் செய்தியை நன்றாகப் புரிந்து கொண்டார். அந்த செய்தியில், அவர்களது குடும்பப் பண்ணையிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள எல்லைப்பகுதியான எல்விவ் (இப்போது உக்ரேனில்) பிரதேசத்தில் இருந்து கிழக்கு போலந்தை ஆக்கிரமிக்க ரஷ்யா அணிதிரட்டுகிறது என கூறப்பட்டது.
மதிய உணவை மேசையில் வைத்துவிட்டு, நான்கு சகோதரர்களும், அந்த நேரத்தில் கர்ப்பமாக இருந்த சகோதரர்களில் ஒருவரின் மனைவியும், அடுத்து என்ன செய்வதென திட்டமிட தொடங்கினர். 4 சகோததர்களும் போலந்தை விட்டு வெளியேறி வேறு இடத்தில் தஞ்சம் புகுவதற்கான கடினமான முடிவை எடுத்தனர்.
அவர்கள் வெளியேறுவதற்கு முன், குடும்ப பொக்கிஷமான வெள்ளி மற்றும் வேட்டையாடும் துப்பாக்கிகளை முழங்கால் அளவு ஆழமான பள்ளத்தில் புதைத்தனர். அதே நாளில் அவர்கள் ஒன்றாக ருமேனியாவிற்கும், அங்கிருந்து தனித்தனியாக உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் தப்பிச் சென்றனர்.
அவர்களின் தந்தை போலந்தில் இருந்தார். அவர் தனது பிறந்த இடத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டார், மேலும் அவர் தனது மகன்கள் வெளியேறிய பிறகு 20 ஆண்டுகள் வாழ்ந்தாலும், அவர் அவர்களை மீண்டும் பார்க்கவில்லை.
தப்பிச் சென்ற சகோதரர்களில் ஒருவர் பிரான்சில் விவசாயம் படித்திருந்தார். அவரும், மனைவியும், 3 வயது மகளும் எகிப்திற்கு தப்பிச் சென்றனர். பின்னர், தென்னாபிரிக்காவில் விவசாயம் செய்ய வாய்ப்பிருப்பதாக அறிந்து, எகிப்திலிருந்து படகில் தென்னாபிரிக்கா சென்றனர்.1947 இல் இங்கு வந்தனர். 1953 இல் மகன் ஜான் கிளாசெவ்ஸ்கி பிறந்தார்.
போலந்திலிருந்து வெளியேறிய கதையை ஜானின் தந்தை பிள்ளைகளிற்கு அடிக்கடி கூறி, நினைவில் பதிய வைத்திருந்தார்.
ஜான் கூறிய தகவலின்படி,
பிள்ளைகள் வெளியேறிய பின்னர், ரஷ்யர்கள் ஒரு மாதத்திற்குப் பிறகு குடும்பத் தோட்டத்திற்கு வந்தனர். என் தாத்தாவை கொல்ல நினைத்தார்கள். அவர்கள் மாவட்டம் முழுவதிலும் உள்ள பணக்கார நில உரிமையாளர்களைக் கொன்றனர். அப்போது அவர் தொழிலாளர்களால் மறைக்கப்பட்டார். ஆனால் அவர்கள் அவரைக் கண்டுபிடித்தார்கள், அவர் காட்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். தொழிலாளர்கள் பின்னால் சென்று, ‘அவரைச் சுடாதீர்கள், அவர் எங்களுக்கு நல்லவர்’ என்று கூறினார்கள்.
இதனால் ரஷ்ய இராணுவம் மனம் மாறி அவரை விடுவித்தது. ஆனால் அவர் ஒருபோதும், பண்ணை வீட்டிற்கு வரக்கூடாது என கட்டளையிட்டு, குடும்ப வீட்டை முற்றிலுமாக அழித்தார்கள்.
தனது குடும்ப சொத்தை மீட்க வேண்டுமென ஜான் விரும்பி பல முயற்சிகள் செய்தார். அவர் தென்னாபிரிக்காவின் கேப் டவுன் பல்கலை சுற்றுச்சூழல் சட்டத் துறை பேராசிரியராகப் பணியாற்றி, அண்மையில் ஓய்வுபெற்றுள்ளார்.
1989 இல் – ஜானின் பெற்றோரும் அவரது மாமாக்களும் போலந்திலிருந்து வெளியேறி 50 ஆண்டுகளுக்குப் பிறகு – அவரது அப்பா அவரிடம் ஒரு கையால் வரையப்பட்ட வரைபடத்தையும், அதே போல் ஒன்றரை பக்க அறிவுறுத்தல்களையும் கொடுத்தார், அதை அவர் விண்டேஜ் பயன்படுத்தி தட்டச்சு செய்தார். தட்டச்சுப்பொறி எப்பொழுதும் எழுத்துகளை மறைத்துவிடும்.
ஜான் கிளாஸெவ்ஸ்கியின் தந்தை நினைவிலிருந்து கையால் வரையப்பட்ட வரைபடத்தை வரைந்தார்.
அவர் வரைபடத்தைப் பெற்ற சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தனது முதல் பயணத்தை தனது குடும்பத்தின் பண்ணையில் மேற்கொண்டார். நிலத்தை ஆய்வு செய்தபோது, பாதாள அறை மட்டுமே எஞ்சியிருப்பதைக் கண்டுபிடித்தார். ஆனால் புதையலை கண்டுபிடிக்க முடியவில்லை.
2019 இல் மீண்டும் போலந்து பண்ணை தோட்டத்திற்கு திரும்பினார். ஆனால் குடும்ப வெள்ளியைக் கண்டுபிடிப்பது எளிதான காரியம் அல்ல. அப்பகுதி புதர்களால் நிரம்பியிருந்தது மற்றும் பாதாள அறை முன்பு இருந்ததைப் போல் தெரியவில்லை – புதையலைக் கண்டுபிடிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
இந்த நிலையில்தான், உள்ளூர் பள்ளி முதல்வராக இருந்து ஓய்வுபெற்ற 92 வயதான பெண்மணி பவுலினாவிடம் உதவி கோரினர். அவருக்கு ஜானின் பாட்டன் கிளாஸெவ்ஸ்கியை நினைவிருந்தது. பெண்மணியின் சகோதரியும், பண்ணையில் சமையலறையில் வேலை செய்ததாகவும், அவர் இறக்கும் வரை ஜானின் தாத்தாவின் புகைப்படத்தை வைத்திருந்ததாகவும் கூறினார்.
அந்த பெண்டணியின் உதவியுடனும், மெட்டல் டிடெக்டரின் உதவியுனும், இப்போது காடாக மாறியுள்ள பகுதியிலிருந்த பண்ணை வீட்டிலிருந்த வெள்ளிப்புதையல்களை மீட்டனர்.




