போதிய நிதி மற்றும் ஏனைய வசதிகள் இல்லாத காரணத்தினால், திட்டமிட்டபடி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதில் சிரமம் காணப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 09 ஆம் திகதி நடத்துவதற்கு போதிய நிதி இல்லாமை உள்ளிட்ட சிரமங்களை மேற்கோள்காட்டி உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்யும் போதே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.



