உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு கோரி கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் பொலிஸாரினால் நீர் மற்றும் கண்ணீர்ப்புகைத் தாக்குதல்களால் எதிர்கொள்ளப்பட்டது.
ஜனநாயகத்தை பாதுகாப்போம் கொழும்பில் ஒன்று திரள்வோம் என்ற தொனிப்பொருளில் பெருந்தொகையான மக்களின் பங்கேற்புடன் மருதானை நகரை மையமாக கொண்டு இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வாக்குரிமையை காப்பாற்ற கொழும்பில் திரள்வோம், ஜனநாயகத்தை காப்பாற்ற கொழும்பில் திரள்வோம் என சுலோக அட்டைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும் இக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



