இலங்கையின் 75வது சுதந்திர தினத்தன்று பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டமைக்காக
தமிழ்தேசிய கூட்டமைப்பு, தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களை சேர்ந்தவர்களிற்கு எதிராக யாழ்ப்பாண பொலிசாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று யாழ்ப்பாண நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கினை விசாரணை செய்த நீதிபதி எதிராளிகளை பிணையில் செல்ல அனுமதித்ததோடு மே மாதம் எட்டாம் திகதி வரை வழக்கினை ஒத்தி வைத்தார்.
வழக்கின் எதிராளிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, மூத்த சட்டத்தரணி ஸ்ரீகாந்தா ஆகியோர் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.



