ஆதன வரி அறவீட்டில் முறைகேடு: பாதிக்கப்பட்ட நபர் முறைப்பாடு

Date:

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையால் அறவிடப்படுகின்ற ஆதன வரி அறவீட்டில்
முறைகேடு இடம்பெற்று தன்னிடம் ஒரே காலப்பகுதிக்கு இரண்டு தடவைகள்
அறவிட்டுள்ளதாக தெரிவித்து பாதிக்கப்பட்ட திருவையாறு கிராமத்தைச்
சேர்ந்த ஒருவர் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.

தன்னிடம் 2021 ஆம் ஆண்டுக்கு 29.12.2022 திகதியில் 4172.90 ரூபா
அறவிட்டுள்ளதோடு, மீண்டும் அதே காலப்பகுதிக்குரிய ஆதனவரியாக 4172.90
ரூபாவை 28.01.2023 அன்றும் கரைச்சி பிரதேச சபையால் அறவிடப்பட்டுள்ளதோடு,
அதற்குரிய 15 வீத தாமத தண்டப் பணமாக 1064.08 ரூபாவும் அறவிடப்பட்டுள்ளது
எனத் தெரிவித்துள்ள அவர்

இது தொடர்பில் பிரதேச சபையின் தவிசாளரை நேரில் சந்தித்து அவரது
கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் இவ் விடயத்தை கண்டுகொள்ளவில்லை என்றும்
இதன் காரணமாக செயலாளருக்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளதாகவும்
தெரிவித்துள்ளார்.

கரைச்சி பிரதேச சபையால் அதிகரித்த ஆதன வரி அறவிடப்படுகின்றமைக்கு எதிராக
தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகின்ற நிலையில்
இவ்வாறு ஒரே காலப்பகுதிக்கு இரண்டு தடவைகள் அறவிடப்படுகின்ற
நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் மேலும் அதிருப்தியை
ஏற்படுத்தியுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

செவ்வந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம்: கொழும்பு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா...

ஹோர்முஸ் ஜலசந்தியின் எதிர்காலத்தை ஈரானும், ஓமனுமே தீர்மானிக்க வேண்டும்!

ஹோர்முஸ் ஜலசந்தியின் எதிர்காலத்தை ஈரானும் ஓமானும்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும், அந்த...

ஈரான் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் படுகாயம்

அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் தெஹ்ரானில் உள்ள அவரது இல்லம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்