பதுளை பொது மருத்துவமனையில் பணியாற்றும் 44 வயதான மருத்துவர் ஒருவர் பாடாசலை மாணவர்களிற்கு போதைப்பொருள் மாத்திரைகளை விற்ற குற்றச்சாட்டில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பசறை முகாம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், காரில் பயணித்த மருத்துவர் வழிமறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டார்.
மருத்துவரின் காரில் 145 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன. அவற்றை வைத்திருப்பதற்கான உரிமம் அவரிடம் இருக்கவில்லை.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் பதுளை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1