25.5 C
Jaffna
December 23, 2024
Pagetamil
இலங்கை

காரைநகர் சிவன் கோயில் குழப்பம் வீடெரிப்பு பிரச்சினையாக மாறியது!

காரைநகர் ஈழத்து சிதம்பரத்தின் திருவெம்பாவை உற்சவத்தினை நடாத்துமாறு கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், வீட்டினை கொழுத்த முற்பட்டதாக தெரிவித்து அவ் ஆலயத்தின் நம்பிக்கை பொறுப்பாளரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

ஆலயத்தில் பாலஸ்தானம் செய்து திருவெம்பாவை நிகழ்வை நடத்தாமல் இருப்பதற்கு ஆலய நிர்வாகத்தினர் திட்டமிட்டிருந்தனர். இது குறித்து ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் பாலஸ்தானம் செய்வதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் ஆலயத்தின் திருவெம்பாவை நிகழ்வை கொரோனா காலத்தில் முன்னெடுத்தது போல 2022ம் ஆண்டும் முன்னெடுப்பது என ஆலய நிர்வாகத்தினர் தீர்மானித்தனர். இந்நிலையில் திருவெம்பாவை உற்சவத்திற்கு புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் உறவுகள் பலர் இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில் இன்னும் பலர் இலங்கைக்கு வருவதற்கும் திட்டமிட்டு விமான பயணச் சீட்டுக்களுக்கு பதிவு செய்திருந்தனர்.

அந்தவகையில் பக்தர்கள் அனைவரும் ஒன்றுகூடி கடந்த 18.12.2022 அன்று ஆலயத்தினை நோக்கி அறவழிப் போராட்டப் பேரணி ஒன்றினை முன்னெடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தின் முடிவில் ஆலயத்தின் நம்பிக்கை பொறுப்பாளரிடம் மகஜரை கையளிக்க முற்பட்டவேளை அவர் வீட்டில் இல்லை என அவரது உறவினர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆலயத்தின் வாயிலில் மகஜரை வைத்துவிட்டு போராட்டத்தில் இருந்து கலைந்து சென்றனர்.

அதன்பின்னர் ஆலயத்தின் நம்பிக்கை பொறுப்பாளர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 13 பேர் தனது வீட்டினை எரிப்பதற்கு முயன்றதாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். இருப்பினும் பொலிஸார் குறித்த பேரணியில் தங்களது கடமையில் தாமும் இருந்ததாகவும் அந்த நேரத்தில் அவ்வாறு எரிப்பதற்கான எந்தவிதமான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை என கூறி விசாரணையை நடாத்துவதற்கு முன்வரவில்லை.

இந்நிலையில் ஆலயத்தின் நம்பிக்கை பொறுப்பாளர் இது குறித்து பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு வழங்கினார். அந்தவகையில் இந்த விடயம் குறித்து விசாரணை நடாத்தி தமக்கு அறிக்கை வழங்குமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவித்தார்.

அந்தவகையில் ஊர்காவற்துறை பொலிஸாரால் சம்பிரதாயபூர்வ விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் பொலிஸார் ஆகியோரது பிரசன்னம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாளை முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை

Pagetamil

பிரித்தானியர் ஒருவரால் வந்த வினை: இலங்கையில் பேராபத்தாக உருவெடுத்துள்ள ஆபிரிக்க நத்தைகள்!

Pagetamil

2025 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்களின் விபரம்!

Pagetamil

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படையின் மருத்துவ கப்பல்

east tamil

தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிப்பா?: வல்வெட்டித்துறை மக்கள் போராட்டம்!

Pagetamil

Leave a Comment