போதைப்பொருளுடன் பதுளை விகாரகொடவில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பதுளை பொது வைத்தியசாலையின் வைத்தியரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பதுளை மைலகஸ்தன்ன பிரதேசத்தை சேர்ந்த பதுளை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் திலின கஜநாயக்க (44) என்ற வைத்தியரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பதுளை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பணத்திற்காக போதை மாத்திரைகள் இரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து நடவடிக்கை எடுத்த பசறை அகரத்தின பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மருத்துவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர்.
அவரிடமிருந்து 145 போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1