யாழில் பெண் அடித்துக் கொலை!

Date:

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்தியடி பகுதியில் 52 வயதுடைய கணவனை பிரிந்து ஒருபெண் பிள்ளையுடன் வசித்து வந்த தாய் நேற்றிரவு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மரணம் இடம்பெற்ற வீட்டிற்கு ஒரு நபர் நீண்டகாலமாக ஆடுகளுக்கு குழை வெட்ட மற்றும் வீட்டு வேலைகளுக்காக வருவார். நேற்று காலையும் அவர் வழமைபோல வந்து நேற்று இரவு வரை வீட்டில் வேலை செய்து கொண்டிருந்ததாகவும் இறந்தவரின் மகள் வீட்டுக்குள் இருந்ததாகவும் இருவரும் சண்டை பிடிக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது வேலை செய்து கொண்டிருந்தவரை காணவில்லை எனவும் தாயார் இரத்தம் தோய்ந்த நிலையில் நிலத்தில் கிடந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையின் போது குறித்த நபர் மரக்கட்டை ஒன்றினால் பெண்ணை தலையில் தாக்கி விட்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கலாநதி சுப்ரமணியம் (52) என்பவரே கொல்லப்பட்டார்.

குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு தடயவியல் பொலிசார் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

செவ்வந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம்: கொழும்பு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா...

ஹோர்முஸ் ஜலசந்தியின் எதிர்காலத்தை ஈரானும், ஓமனுமே தீர்மானிக்க வேண்டும்!

ஹோர்முஸ் ஜலசந்தியின் எதிர்காலத்தை ஈரானும் ஓமானும்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும், அந்த...

ஈரான் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் படுகாயம்

அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் தெஹ்ரானில் உள்ள அவரது இல்லம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்