திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து ஏமாற்றியதாக நடிகை ராக்கி சாவந்தின் கணவர் மீது ஈரான் பெண்ணொருவரும் மைசூரு போலீசில் பாலியல் புகார் அளித்துள்ளார்.
பிரபல இந்தி கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவரது கணவர் அடில் துரானி. இவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் தான் திருமணமாகி இருந்தது. திருமணத்திற்காக ராக்கி மதம் மாறி, பாத்திமா என பெயரையும் மாற்றினார்.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
ராக்கி சாவந்த் தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்தார். கணவர் அடில் துரானி தன்னை கொலை செய்ய முயற்சி செய்வதாகவும், தாக்கியதாகவும், வீட்டில் இருந்த ரொக்கப்பணம், தங்க நகைகளை திருடி சென்றுவிட்டதாகவும், இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்டதாகவும் புகார் கொடுத்திருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த நிலையில், அவர் மீது மீண்டும் ராக்கி சாவந்த் பரபரப்பு குற்றச்சாட்டு கூறி இருந்தார். அதாவது அடில் துரானி தனது நிர்வாண வீடியோக்களை சிலருக்கு விற்பனை செய்துவிட்டதாக கூறி இருந்தார்.
இந்த நிலையில் ராக்கி சாவந்தின் கணவர் அடில் துரானி மீது மைசூரு வி.வி.புரம் போலீசில் 30 வயதான ஈரான் நாட்டு பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். அடில் துரானி மீது மைசூரு போலீசார் ஞாயிற்றுக்கிழமை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
ஈரானியப் பெண், அளித்த புகாரின்படி, அவர் 2018 இல் மைசூருவில் இருந்து பார்மசி டாக்டர் படிப்பைத் தொடர இந்தியா வந்தார். 2018 ஆம் ஆண்டு வி.வி.புரத்தில் உணவகம் நடத்தி வந்த அடில் என்பவருடன் நட்பு ஏற்பட்டது.
விரைவில், இருவரும் நெருக்கமாகிவிட்டனர். அடில் அவளை திருமணம் செய்து கொள்வதாக கூறியதாக கூறப்படுகிறது. தானும் அடிலும் மூன்று வருடங்களாக யாதவகிரியில் உள்ள ஒரு குடியிருப்பில் ஒன்றாக வாழ்ந்து வருவதாக அந்தப் பெண் கூறினார். ஆனால் சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு, அந்த பெண் திருமணத்திற்கு வற்புறுத்தியபோது, அதில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதாகவும், தன்னைத் தாக்கியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தனது அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்றும், தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினால் ஈரானில் உள்ள பெற்றோருக்கு அனுப்பி விடுவேன் என்றும் மிரட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு ஓகஸ்ட் 31ஆம் திகதி அடில் தனது மொபைலில் இருந்து புகைப்படங்களை நீக்கிவிட்டதாக அவர் கூறினார். அவரை தொலைபேசியில் அழைத்தபோது, மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஈரான் நாட்டவர் பெப்ரவரி 10 அன்று காவல் நிலையத்திற்குச் சென்று அடில் கானுக்கு எதிராக புகார் அளித்தார். ஐபிசி 376 (கற்பழிப்பு), 417 (ஏமாற்றுதல் தண்டனை), 420 (ஏமாற்றுதல்), 504 (வேண்டுமென்றே அவமதித்தல்), 506 (உயிர் அச்சுறுத்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம்” என்று நரசிம்மராஜா பிரிவு ஏசிபி அஸ்வத் நாராயண் கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவர், அவரது மனைவி ராக்கி சாவந்த் தாக்கல் செய்த மோசடி வழக்கு தொடர்பாக மும்பையில் நீதிமன்ற காவலில் இருப்பதாக போலீஸ் அதிகாரி கூறினார். “நாங்கள் வழக்கை விசாரித்து வருகிறோம், விரைவில் நீதிமன்றத்தை அணுகுவதன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்களை காவலில் எடுப்போம்” என்று நாராயண் கூறினார்.
கணவர் தன்னைத் தாக்கியதாகவும், தனக்குத் தெரியாமல் வீட்டில் இருந்து பணம் மற்றும் நகைகளை எடுத்துச் சென்றதாகவும், இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்டதாகவும் ராக்கி முறையிட்டதை தொடர்ந்து அடில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
41 வயதான நடிகை ராக்கியை வரதட்சணைக்காக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 30 வயதான அடில், விசாரணைக்காக மும்பை புறநகர் ஓஷிவாரா காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார்.
கடந்த வாரம் ஓஷிவாரா காவல் நிலையத்தில் ஆதில் மீது சாவந்த் புகார் அளித்தார். சமீபத்தில் இறந்த தனது தாய்க்கு அடில் சிகிச்சை அளிக்கவில்லை என்றும் சாவந்த் குற்றம் சாட்டினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு அடிலுக்கு ரூ.10 லட்சம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டினார்.