Pagetamil
உலகம்

ரஷ்யாவின் இரண்டு ஏவுகணைகள் நேட்டோ நாட்டை ஊடறுத்ததா?

வெள்ளிக்கிழமை (10) உக்ரைன் மீது ரஷ்யாவினால் ஏவப்பட்ட இரண்டு  ஏவுகணைகள் ருமேனியாவின் வான்வெளியை குறுக்கறுத்ததாக உக்ரைன் கூறியுள்ளது.

ருமேனியா நேட்டோ உறுப்பினர். இருப்பினும், உக்ரேனிய கூற்று ருமேனியாவால் மறுக்கப்பட்டது. ரஷ்ய ஏவுகணைகள் ருமேனியா மற்றும் மால்டோவாவின் வான்வெளியைக் கடந்து உக்ரைனுக்குள் தாக்கியதாக உக்ரைனின் ஆயுதப் படைத் தலைவர் கூறினார்.

“ரஷ்ய கூட்டமைப்பின் கப்பலில் இருந்து கருங்கடலில் இருந்து ஏவப்பட்ட வான்வழி இலக்கை” ருமேனியா கண்டறிந்தது, ஆனால் “எந்த நேரத்திலும் அது ருமேனியாவின் வான்வெளியில் குறுக்கிடவில்லை” என்று ருமேனியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“ருமேனியாவின் வான்வெளியில் பறந்த இலக்கை அவதானித்தோம். ருமேனியா  எல்லைக்கு வடகிழக்கில் சுமார் 35 கிலோமீட்டர் (22 மைல்) தொலைவில் உள்ள ரேடார் அமைப்புகளால் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.

நேட்டோ கட்டளையின் கீழ் விமானக் காவல் கடமையில் இருந்த இரண்டு ரோமானிய விமானப்படை MiG-21 LanceR விமானங்கள் அந்தப் பகுதி நோக்கி அனுப்பப்பட்டன.

வான்வெளி உண்மையில் மீறப்பட்டது என்பது எதிர்காலத்தில் வெளிச்சத்திற்கு வந்தால், அது ருமேனியா சம்பந்தப்பட்ட முதல் நிகழ்வாக இருக்கும். நேட்டோ கூட்டணியில், ஒரு உறுப்பினருக்கு எதிரான தாக்குதல் மற்ற அனைவருக்கும் எதிரான தாக்குதலாக கருதப்படுகிறது.

அண்டை நாடான மால்டோவா, “மால்டோவாவின் வான்பரப்பைக் கடக்கும் ஏவுகணையை” கண்டறிந்ததை உறுதி செய்து, ரஷ்ய தூதரை வரவழைத்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய ஏவுகணை தாக்குதலின் போல, பலமுறை ஏவுகணை சிதறல்கள் விழுந்துள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

Pagetamil

சரணடைந்தார் ஜெலன்ஸ்கி!

Pagetamil

‘இந்த ஆள் அமைதியை விரும்பவில்லை’: மீண்டும் ஜெலென்ஸ்கியை விமர்சித்த டிரம்ப்!

Pagetamil

ரஷ்யா மீதான தடைகளின் ஒரு பகுதியை தளர்த்தும் திட்டத்தை தயாரிக்கிறது அமெரிக்கா!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!