ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்று காலையில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வரவேற்றார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் விசேட அழைப்பாளர்களும் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளனர்.
இரண்டாவது அமர்வு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி விக்ரமசிங்க அரசியலமைப்பின் 33 (2) வது பிரிவின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை முன்வைத்து வருகிறார்.
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பித்ததன் பின்னர், நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும் என நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் மீதான இரண்டு நாள் விவாதம் நாளையும் வெள்ளிக்கிழமையும் நடைபெறவுள்ளது.