வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பேரணியில் கலந்து கொண்ட 7 பேரை பொலிசார் விசாரணைக்காக அழைத்துள்ளனர்.
யாழ்ப்பாணம், பொலிஸ் தலைமையகத்தில் முன்னிலையாகுமாறு அவர்களிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், தமிழ் மக்கள் கூட்டணியின் வி.மணிவண்ணன், வேலன் சுவாமி ஆகியோரே அழைக்கப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1