வழிப்பறியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் பொலிசாரிடமிருந்து தப்பிக்க கடலில் குதித்த சந்தேகநபர் ஒருவரை, காலி போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடலில் குதித்து, நீந்திச்சென்று கைது செய்துள்ளார்.
19 வயதுடைய சந்தேக நபர், பேரூந்துகளில் பயணிக்கும் பொதுமக்களிடம் இருந்து பணம் திருடி வந்துள்ளார்.
பொலிஸார் அவரை கைது செய்ய முற்பட்டபோது, சந்தேகநபர் கடலில் நீந்திச் செல்ல முயன்றார்.
எவ்வாறாயினும், அருகாமையில் இருந்த காலி போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், கடலுக்குள் குதித்து சந்தேக நபரை பின்தொடர்ந்து நீந்தித் சென்று, பிடித்தார். பின்னர், கரைக்கு அழைத்து வந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1