25.8 C
Jaffna
December 26, 2024
Pagetamil
உலகம்

துருக்கி, சிரியா நிலநடுக்கம்: உயிரிழப்பு 12,000ஐ நெருங்குகிறது!

துருக்கி, சிரிய பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,000ஐ நெருங்குகிறது.

இரு நாடுகளிலிருந்தும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,859 ஆக உயர்ந்துள்ளது மற்றும் வரும் நாட்களில் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துருக்கியில் குறைந்தது 9,057 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 52,979 பேர் காயமடைந்துள்ளனர்.

சிரியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,802 பேரை எட்டியுள்ளது.


துருக்கி, சிரியா உயிரிழப்பு 10,000ஐ நெருங்குகிறது!

சிரியா – துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்குகிறது.

துருக்கியில் 7,108 பேர் உயிரிழந்துள்ளனர். 34,810 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,500 ஐத் தாண்டியுள்ளது என்று ஆட்சி ஊடகம் மற்றும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கில் செயல்படும் மீட்பு சேவை தெரிவித்துள்ளது.

அனர்த்தம் நிகழ்ந்து 30 மணித்தியாலங்கள் கடந்து விட்டமை, காலநிலையால் மீட்பு பணியில் ஏற்பட்டுள்ள சிரமம் போன்றவற்றினால் இடிபாடுகளில் சிக்கியவர்களில் உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பதற்கான நம்பிக்கை குறைகிறது.

கடந்த 30 மணி நேரத்திற்கும் மேலாக நடக்கும் மீட்பு பணியில் இடிபாடுகளிற்குள்ளிருந்து  சிறு குழந்தைகள் உட்பட, பலர் வியத்தகு முறையில் மீட்கப்பட்டு வந்தாலும், பெருகி வரும் உயிரிழப்பு எண்ணிக்கை பரவலாக விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாயன்று, துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களில் – மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் – அவசரகால நிலையை அறிவித்தார்.

ஏறக்குறைய 30 நாடுகளில் இருந்து தேடுதல் குழுக்கள் மற்றும் உதவி உறுதிமொழிகள் அறிவிக்கப்பட்டன.

எனினும், சிரியாவின்ற்கு உதவி சென்று சேர்வதில் சிரமம் நிலவுகிறது. பொருளாதார தடை, மோதல் காரணமாக உதவி எதிர்பார்த்த வேகத்தில் சென்று சேரவில்லை.  அங்கு இடிபாடுகளுக்குள் இருந்து உதவி கோரி எழுந்த அழும் குரல்கள் பெரும்பாலும் அமைதியாகி விட்டன என மீட்பு பணியாளர்கள் தெரிவித்தனர்.

நிலநடுக்கத்திற்கு 20,000பேர்வரை உயிரிழந்திருக்கலாம் என்றும், 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. துருக்கியில் நிலநடுக்கத்தினால் உறவுகளை இழந்த ஒருவர் கூறும்போது, “அந்த இடிபாடுகளில் எனது சகோதரனையும், அவரது குழந்தையையும் நாங்கள் இழந்தோம். நிலநடுக்கத்தினால் பல குடும்பங்கள் தங்கள் சொந்தங்களை இழந்துள்ளன. நேற்று ஒரு குழந்தை மட்டும் மீட்கப்பட்டது. அந்த குழந்தையின் தாய் உட்பட பலர் இறந்துவிட்டனர். இப்பகுதிக்கு அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை. கடும் பனி இங்கு நிலவுகிறது” என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஆப்கானிஸ்தானுக்குள் திடீர் வான் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

Pagetamil

பறவை மோதியதால் விபரீதமா?: பயணிகள் விமானம் விபத்து; ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

ஜனாதிபதியாக இருந்தால்தான் கணவன்: சிரியாவிலிருந்து தப்பியோடிய ஆசாத்திடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

Pagetamil

உகண்டாவை உலுக்கும் டிங்கா டிங்கா வைரஸ்: இந்த வைரஸ் தொற்றினால் தொடர்ந்து நடனமாடிக் கொண்டேயிருப்பீர்கள்!

Pagetamil

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்!

east tamil

Leave a Comment