உலக அளவில் ரூ.250 கோடியைத் தாண்டிய அஜித்தின் ‘துணிவு’ வசூல்

Date:

அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் உலக அளவில் ரூ.250 கோடியைத் தாண்டி வசூலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ சாமானியர்கள் மீது வங்கிகள் நிகழ்த்தும் அத்துமீறல்களை பேசுகிறது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். ஜனவரி 11 ஆம் திகதி வெளியான இப்படத்தின் சிறப்புக் காட்சிகள் முதல்நாள் நள்ளிரவு 1 மணி அளவில் தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டன. சமுத்திரகனி, ஜான்கொக்கேன், மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் முதல் நாள் தமிழகம் முழுவதும் ரூ.24.59 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தற்போது படம் வெளியாகி 26 நாட்கள் கடந்துவிட்ட சூழலில், இதுவரை ‘துணிவு’ உலக அளவில் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் வரும் 8-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு நீதிமன்றிற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேருக்கு 13 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் இடம்பெற்ற 3 கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான்...

சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களை குறிவைக்கும் பொலிசார்

குறைபாடுள்ள அல்லது சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களால் ஏற்படும் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கும்,...

ஜனக பெரேரா கொலை வழக்கு: ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்!

அனுராதபுரத்தில் 2008-ஆம் ஆண்டு நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஓய்வுபெற்ற மேஜர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்