மாற்றாந்தாயின் தொல்லை தாங்க முடியாமல் 11 வயது சிறுமி 4 கிலோமீற்றர்கள் தூரம் தனியாக நடந்து பொலிஸ் நிலையத்திற்கு வந்ததாக ஹொரவபொத்தானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுமியின் தாய் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், பின்னர் அவரது தந்தை, ஒரு பிள்ளையின் தாயாரை மறுமணம் செய்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
பொலிஸாரிடம் வந்த சிறுமி, தனது சித்தி தனது மகளை மிகவும் அன்பாக நடத்துவதாகவும், தன்னை திட்டி, தாக்கி, துன்புறுத்துவதாகவும், தொல்லை தாங்க முடியாமலிருப்பதாகவும் சிறுமி அழுது கொண்டே பொலிஸாரிடம் வந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீட்டிலிருந்து பொலிஸ் நிலையம் சுமார் நான்கு கிலோமீற்றர் தூரத்தில் உள்ளதாகவும், அந்த தூரத்தை அவர் நடந்தே சென்று இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, சிறுமியின் சித்தியான நாற்பத்தொரு வயதுடைய பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் நாளை (05) மேற்கொள்ளப்படவுள்ளன.




