போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி புரோ லீக்கில் அல் நாசருக்காக வெள்ளிக்கிழமை தனது முதலாவது கோலை அடித்தார்.
அல் ஃபதேவுடன் நடந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனிலையில் முடிந்தது.
37 வயதான ரொனால்l்டோ ஐந்து முறை Ballon D’Or விருதை வென்றவர். ஜனவரியில் அல் நாசர் கிளப்பில் கையெழுத்திட்டார். அந்த அணிக்காக மூன்று ஆட்டங்களில் ஆடிய பின்னர், நேற்று முதலாவது கோலை அடித்தார். ஆட்டத்தின் 93 வது நிமிடத்தில் பெனால்டி அடித்து ஆட்டத்தில் தனது அணியை சமன் செய்தார்.
“சவுதி லீக்கில் எனது முதல் கோலை அடித்ததில் மகிழ்ச்சி. மிகவும் கடினமான போட்டியில் ஒரு முக்கியமான சமனிலையை அடைய முழு அணியுடன் பெரும் முயற்சி செய்தேன்!” என ஆட்டத்திற்குப் பிறகு ரொனால்டோ ருவிட்டரில் கூறினார்.
போட்டியின் போது அவர் தனது பல புகைப்படங்களையும் வெளியிட்டார்.
Happy to have scored my first goal in the Saudi league and great effort by whole team to achieve an important draw in a very difficult match! 💪🏼
💛💙 pic.twitter.com/3Ll56WrkWn— Cristiano Ronaldo (@Cristiano) February 3, 2023
ரொனால்டோ டிசம்பரில் அல் நாசருடன் 2-1/2 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதன் மதிப்பு 220 மில்லியன் டொலருக்கும் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது, மேலும் அவர் வந்த சிறிது நேரத்திலேயே கப்டனாக நியமிக்கப்பட்டார்.