75 ஆவது தேசிய சுதந்திரக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (04) கொழும்பில் நடத்தப்படவிருந்த போராட்டம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதிகளை தடை செய்யக்கூடாதென உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறிதம்ம தேரர், ஜோசப் ஸ்டாலின், துமிந்த நாகமுவ உள்ளிட்ட 27 பேரின் பெயர்கள் அடங்கிய நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சுதந்திர வைபவத்தின் போது காலி முகத்திடல் வீதிகளை இடையூறு விளைவிக்கவுள்ளதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக கோட்டை, கொம்பனித் தெரு மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையங்கள் விடுத்த கோரிக்கையை கருத்திற் கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1