பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்கள் பதவிவிலகுவதாக அறிவித்துள்ளனர்.
உதேனி விக்ரமசிங்க, மொஹான் சமரநாயக்க ஆகியோரே பதவிவிலகுவதாக கடிதம் மூலம் ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவித்துள்ளனர்.
மொஹான் சமரநாயக்க எழுதிய கடிதத்தில் தொழில்சார்ந்த, விரும்பத்தகாத மற்றும் சகிக்க முடியாத. ‘அந்த அளவுக்கு நிலைமை சீரழிந்துவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 20, 2023 அன்று ஆணைக்குழுவின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றபோது, ஒரு குண்டர் குழு மறைமுகமாக மிரட்டியதாகவும், ஆணைக்குழு தலைவர் இதை நியாயப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆணைக்குழுவின் தலைவர் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதால், ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் தேவையற்றவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சமூகத்தின் முன் நான் அவமானப்படுத்தப்பட்டு வில்லன் சாயம் பூசப்பட்டிருக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.