காணாமல் போயிருந்த வர்த்தகர் சடலமாக மீட்பு

Date:

பல நாட்களாக மர்மமான முறையில் காணாமல் போயிருந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் சடலம் தலங்கம பெலவத்தை பகுதியில் உள்ள அவரது ஆடம்பரமான மூன்று மாடி வீட்டின் நீச்சல் தடாகத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெல்லம்பிட்டிய, கிட்டம்பஹு பகுதியைச் சேர்ந்த ரொஷான் வன்னிநாயக்க என்ற 49 வயதுடைய நபரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 30 ஆம் திகதி வீட்டிலிருந்து சென்ற தனது சகோதரர் இதுவரை வீடு திரும்பவில்லை என நேற்று (01) உயிரிழந்தவரின் சகோதரி வெல்லம்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த வர்த்தகரின் மர்ம மரணம் தொடர்பில், நீதவான் விசாரணை மற்றும் நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வந்து விசாரணைகளை மேற்கொள்ள உள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

செவ்வந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம்: கொழும்பு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா...

ஹோர்முஸ் ஜலசந்தியின் எதிர்காலத்தை ஈரானும், ஓமனுமே தீர்மானிக்க வேண்டும்!

ஹோர்முஸ் ஜலசந்தியின் எதிர்காலத்தை ஈரானும் ஓமானும்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும், அந்த...

ஈரான் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் படுகாயம்

அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் தெஹ்ரானில் உள்ள அவரது இல்லம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்