சாவகச்சேரி மிருசுவில் பகுதியில் இன்று (1) நடந்த வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மிருசுவிலில் உள்ள உணவகமொன்றில் இன்று இரவு உணவு எடுப்பதற்காக சென்ற ஒருவர், கடைக்கு அருகில் வைத்து வாளால் வெட்டி காயப்படுத்தப்பட்டுள்ளார்.
மதுபோதையில் நின்ற கும்பல் ஒன்றுடன் தகராறு ஏற்பட்டதையடுத்து வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. காயமடைந்தவரும் மதுபோதையில் இருந்தார்.
பாலாவி, கொடிகாமத்தை சேர்ந்த 27 வயதான ஒருவரே கால், கையில் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1