26.3 C
Jaffna
March 23, 2023
இலங்கை

யாழில் ரணிலுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது!

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கான வழக்கை பெப்ரவரி 28ம் திகதி தவணையிட்டு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜனவரி 15 ஆம் திகதி ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகளின் வழக்கு விசாரணை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் இன்று(31)இடம்பெற்றது.

நீதிமன்ற அழைப்பாணைக்கமைய வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர் சங்க செயலாளர் , பல்கலைக்கழக மாணவர் ஆகியோர் இன்றைய தினம் மன்றில் முன்னிலையாகிய நிலையில் தலா ஒரு லட்சம் ரூபாய் சரீரப்பிணையில் இருவரும் விடுதலை செய்யப்பட்டதோடு பொலிஸ்நிலையத்தில் வாக்குமூலம் அளிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

வழக்கை விசாரித்த நீதவான் ஏ.ஆனந்தராஜா பெப்ரவரி 28ஆம் திகதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

மேலும் ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்ற அழைப்பாணை அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல் வழங்கப்படாவிட்டால் குற்றம்: கொழும்பு பிரதான நீதவான்!

Pagetamil

தலைபிறை தென்படவில்லை: 24ஆம் திகதி புனித ரமழான் ஆரம்பம்!

Pagetamil

வடமராட்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

Pagetamil

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள்

Pagetamil

தீவகத்தில் நடமாடும் மருத்துவ சேவை

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!