Pagetamil
கிழக்கு

தமிழ் அரசு கட்சியின் பட்டிருப்பு வேட்பாளர் அறிமுகம்

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பும் தேர்த்தில் தொகுதியில் உள்ளடங்கும் மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப்பற்று, மண்முனை தென் மேற்கு ஆகிய மூன்று பிரதேச சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (29) பெரியகல்லாறு ப்ரித்தி மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது தொடக்கவுரையை கணேசமூர்த்தி சுதர்ஷனும், தலைமையுரையை கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக் கிளை செயலாளர் ந.துஷியந்தனும் நிகழ்த்தினர்.

பின்னர் உள்ளுராட்சி மன்றங்களில் வேட்பாளர்களாகப் போட்டியிடுவோர் தம்மைச் சுய அறிமுகம் செய்து கொண்டதைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் மா.நடராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோரின் உரைகள் இடம்பெற்றன. இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கட்சியின் தொண்டர்கள், மற்றும் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

தூக்கில் தொங்கிய சடலம் அடையாளம் காணப்பட்டது!

Pagetamil

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்

Pagetamil

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு வரிசை

Pagetamil

கொம்மாதுறையில் யானைத்தாக்குதலில் ஆசிரியர் வீடு பெரும் சேதம்

Pagetamil

Leave a Comment