‘காதலுக்கு வயசெல்லாம் கிடையாது’: சின்னப்பையனுடனான காதலுக்கு மாஸ்டர் நாயகி விளக்கம்!

Date:

திருவனந்தபுரம்: பேட்ட, மாஸ்டர், மாறன் படங்கள் மூலம் கோலிவுட் ரசிகர்களிடம் பிரபலமான மாளவிகா மோகனன் தற்போது மலையாளத்தில் பிஸியாகிவிட்டார். மலையாளத்தில் அவர் நடித்துள்ள கிறிஸ்டி என்ற திரைப்படம் அடுத்த மாதம் 17ம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்தில் மாளவிகா மோகனுக்கு ஜோடியாக அவரை விட வயது குறைந்த இளம் நடிகரான மேத்யூ தாமஸ் நடித்துள்ளார்.

இந்நிலையில், கிறிஸ்டி டீசர் வெளியானதை தொடர்ந்து Ask Malavika என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்களுடன் உரையாடிய அவர், இளம் வயது ஆணுடன் காதல் வருமா என்ற கேள்விக்கு க்யூட்டாக பதிலளித்துள்ளார்.

பிரபல சினிமாட்டோகிராஃபர் கே.யு. மோகனனின் மகளான மாளவிகா, மலையாளத்தில் பட்டம் போலே என்ற படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்த அவர், பிரபல ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் ‘பியாண்ட் தி க்ளவுட்ஸ்’ என்ற இந்தி படத்தில் நடித்து இன்னும் புகழ்பெற்றார். தமிழில் ரஜினியுடன் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர், தனுஷுடன் மாறன் ஆகிய படங்களில் நடித்து கோலிவுட் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வருகிறார்.

இந்நிலையில், தற்போது மலையாளத்தில் கிறிஸ்டி திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஆல்வின் ஹென்ரி இயக்கியுள்ள இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதில் மாளவிகா மோகனுடன் கும்பளங்கி நைட்ஸ் பட புகழ் மேத்யூ தாமஸ் லீடிங் ரோலில் நடித்துள்ளார். தன்னை விட வயதில் மூத்த பெண்ணான மாளவிகா மோகனனை மேத்யூ தாமஸ் காதலிப்பது தான் படத்தின் கதை எனக் கூறப்படுகிறது.

கிறிஸ்டி பெப்ரவரி 17ம் திகதி வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்காக ask malavika என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்களுடன் உரையாடினார் மாளவிகா மோகனன். அதில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு மாளவிகா மோகனன் பதிலளித்து வந்தார்.

“வயதில் மூத்த பெண், சிறிய வயது ஆண் இடையேயான காதல் பற்றிய உங்கள் கருத்து என்ன? கிறிஸ்டி படம் இதன் பின்னணியில் தான் உருவாகியுள்ளதாக நினைக்கிறேன்” என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன் “காதல் அந்தஸ்து, வயது, சமூக எல்லைகள் இவற்றையெல்லாம் பார்க்காது என நினைக்கிறேன். லவ் இஸ் லவ் இல்லையா” என வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.

மாளவிகா மோகனின் இந்த பதில் டிவிட்டரில் ட்ரெண்ட் அடித்து வருகிறது. மோனிகா பெலுச்சி நடிப்பில் வெளியான பிரபல ‘மலெனா’ திரைப்படம் போல கிறிஸ்டியும் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கிறிஸ்டி டீசரை பார்த்த ரசிகர்கள், படத்தை பார்க்க ஆர்வமாக இருப்பதாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரான் யுரேனியத்தின் கதி என்னவாகும்?

சுமார் 10 அணு குண்டுகளைத் தயாரிக்கப் போதுமான அளவு அதிக செறிவூட்டப்பட்ட...

விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது முறைகேடானது: உயர் நீதிமன்றம்

இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்,...

ஹிரு மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஹிரு மீடியா நெட்வொர்க் மற்றும் ஆசியா பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (பிரைவேட் லிமிடெட்)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்