29.6 C
Jaffna
July 13, 2024
இந்தியா

‘கணவனை விட்டுவிட்டு என்னை திருமணம் செய்து கொள்’; நடிகையின் முன் மண்டியிட்டு கெஞ்சிய கில்லாடி: இலங்கை அழகியை ஏமாற்றியவரின் மற்றொரு நாடகம்!

பாடசாலை நிகழ்ச்சிக்கு செல்வதாக ஏமாற்றி என்னை திஹார் சிறைக்கு அழைத்து சென்றனர். அங்கு என்னை திருமணம் செய்ய விரும்புவதாக முழந்தாளிட்டு சுகேஷ் சந்திரசேகர் கெஞ்சினார் என இந்தி சீரியல் நடிகை சாஹத் கண்ணா கூறியுள்ளார்.

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்கும் விவகாரம் உட்பட பல மோசடி மற்றும் முறைகேட்டு வழக்குகளில் பிரபல இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சிறையில் இருக்கும் போது சுகேஷ் பல்வேறு முறைகேடுகளிலும் ஈடுபட்டு வருவது டெல்லி காவல்துறைக்கு பெரும் தலைவலியாகவே இருந்து வருகிறது.

சிறையிலிருந்தபடி, தொழிலதிபர்களை ஏமாற்றி ரூ.200 கோடி மோசடி செய்துள்ளார். அந்த மோசடி பணத்தில் சிறைக்குள்ளிருந்தபடியே மொடல் அழகிகள், நடிகைகளிற்கு காதல் வலை விரித்து, உல்லாசமாக இருந்துள்ளார்.

பாலிவுட் நடிகைகளான ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா ஃபதேஹி, நிக்கி தம்போலி, சோபியா சிங் மற்றும் அருஷா பாட்டீல் ஆகியோரும், சின்னத்திரை நடிகை சாஹத் கண்ணாவும் சுகேஷை சிறையில் சந்தித்ததாக கூறப்படுகிறது.

டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இந்த விவகாரம் குறித்த விசாரணை நடந்து வரும் வேளையில் இதன் அடுத்த விசாரணை பெப்ரவரி 15ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், திகார் சிறையில் வைத்து கடந்த 2018ம் ஆட்னு சுகேஷ் சந்திரசேகர் தன்னிடம் காதலை வெளிப்படுத்தியதாக பிரபல இந்தி சீரியல் நடிகை சாஹத் கண்ணா,  எகனாமிக்ஸ் டைம்ஸ் ஆங்கில செய்தி நிறுவனத்திடம் கூறியிருப்பது முறைகேட்டு வழக்கில் மேலும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

சஹத் கண்ணா சமீபத்தில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். அது பற்றி அவர் அளித்த பேட்டியில்-

அவர் கூறியிருப்பதாவது, “நான் மே 18, 2018 அன்று டெல்லிக்கு பயணம் செய்தேன். மும்பை விமான நிலையத்தில் ஏஞ்சல் கான் என்ற பெண்ணைச் சந்தித்தேன். (ஏஞ்சல் கான் பிங்கி இரானியின் மாற்றுப்பெயர்) அந்த நிகழ்ச்சிக்கு என்னுடன் வருவேன் என்று கூறினார். டெல்லியில் இறங்கியதும் பள்ளிக்கு செல்ல கார் எடுத்தோம். ஆனால் சிறிது நேரம் கழித்து, நாங்கள் திடீரென்று நிறுத்தினோம், பள்ளி வளாகத்திற்குள் இது அனுமதிக்கப்படாது என்பதால் நாங்கள் கார்களை மாற்ற வேண்டும் என்று அவள் சொன்னாள். நாங்கள் ஒரு சாம்பல் நிற இன்னோவாவுக்கு மாறினோம்.

சில நொடிகளில், நாங்கள் திகார் சிறைக்கு வெளியே இருப்பதை உணர்ந்தேன். இதைப் பற்றி நான் அவளிடம் கேட்டபோது, நாங்கள் சிறை வளாகம் வழியாக பள்ளிக்குள் நுழைய வேண்டும் என்று கூறினார்.

திஹார் ஜெயிலில் இறங்கிய போது அதிர்ச்சிக்கும் அச்சத்துக்கும் ஆளாகியதாகவும் குறிப்பிட்டார்.

“நான் சிக்கிக்கொண்டதை அறிந்தேன், என் பெற்றோருடன் மும்பையில் இருந்த எனது இரண்டு குழந்தைகளைப் பற்றி நினைத்து பீதி அடைய ஆரம்பித்தேன். காரில் இருந்து இறங்கியவுடன் ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அறை முழுவதும் மடிக்கணினிகள், கைக்கடிகாரங்கள் மற்றும் விலையுயர்ந்த ஆடம்பரப் பொருட்களால் நிறைந்திருந்தது எனக்கு நினைவிருக்கிறது. லேப்டாப்கள், வாட்ச்கள், நிறைய ஆடம்பர பொருட்கள், ஒரு சோஃபா, போர்ட்டபிள் ஏசி மற்றும் ஃப்ரிட்ஜ் என எல்லாமும் இருந்தன.

அப்போது ஃபேன்சியான டி.ஷர்ட்டுடன் வந்த சுகேஷ் சந்திரசேகர், எனது ரசிகர் என்று கூறியதோடு தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மருமகன் தான் என்றும் தென்னிந்தியாவில் டிவி சேனல் ஒன்றின் ஓனர் என்றும் அவரை அறிமுகம் செய்துக் கொண்டார்.

`எதற்காக என்னை இங்கு அழைத்தாய்? ஏதோ நிகழ்ச்சி என்று கூறியதால்தான் என்னுடைய ஆறு மாத குழந்தையை விட்டுவிட்டு வந்திருக்கிறேன்’ எனக் கூறினேன்.

பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென என் முன் மண்டியிட்டு என்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு கேட்டார். இதைக் கேட்டு அதிர்ந்து போன நான் அவரை நோக்கி கத்தியதோடு, எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது என்றேன். அதற்கு அவர், என் கணவர் சரியானவர் அல்ல. என் குழந்தைகளுக்கு அப்பாவாகவும் இருப்பதாக கூறினார். இதையெல்லாம் கேட்டதும் பதற்றத்தில் அழுதுவிட்டேன்.” என சாஹத் கண்ணா கூறியிருக்கிறார்.

சுமார் அரைமணி நேரம் திகார் சிறையில் இருந்த சாஹத் கண்ணா, அதன் பிறகு ஏஞ்சல் கானுடன் விமான நிலையத்துக்கு திரும்பியிருக்கிறார்.

சாஹத் மும்பை செல்வதற்கு முன்பு சுகேஷ் கொடுக்கச் சொன்னதாக ஏஞ்சல் கான் 2 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது.

அதன்பிறகு சில நாட்கள் கழித்து 10 லட்சம் ரூபாய் கொடுக்கும்படியும், இல்லாவிடில் திஹார் சிறைக்கு வந்து சென்ற சிசிடிவி காட்சியை டிவி ஒளிபரப்பிவிடுவேன் என மிரட்டல் வந்தது. இதனையடுத்து அமலாக்கத்துறையின் சம்மன் வந்ததும்தான் அந்த சுகேஷ் சந்திர சேகர் மோசடி பேர்வழி என்று தெரிய வந்தது என சாஹத் கண்ணா தெரிவித்திருக்கிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழகத்துக்கு காவிரி நீர் தர முடியாது – கர்நாடக முதலமைச்சர் .

Pagetamil

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Pagetamil

மக்களுடன் முதல்வர் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி மாவட்டத்தில் ஆரம்பித்துள்ளார்.

Pagetamil

நாம் உலகிற்கு புத்தரை கொடுத்துள்ளோம், யுத்தத்தை கொடுக்கவில்லை-இந்திய பிரதமர்

Pagetamil

இரண்டு நாட்கள் ரஷ்யப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியப் பிரதமர் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.

Pagetamil

Leave a Comment