நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 4,387 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
2023 ஆம் ஆண்டில் இதுவரை கொழும்பில் 741 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு புத்தளத்தில் 625 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கம்பஹாவில் 491 பேரும், கல்முனையில் 397 பேரும், யாழ்ப்பாணத்தில் 351 பேரும் பதிவாகியுள்ளனர்.
2022 இல் இலங்கையில் 66,376 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதிகளவானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால், 3 நாள் காய்ச்சல் நீடித்தால், பொதுமக்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.