26.3 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இலங்கை

படுக்கைக்கு அடியில் பெற்றோல் போத்தல்: தாயும், பிள்ளைகளும் தீயில் கருகிப் பலி!

அநுராதபுரம், எலயாபத்து, வேவ வீதி மன்கடவல பிரதேசத்தில் வீடொன்றில் நேற்று முன்தினம் (26) ஏற்பட்ட தீயினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் வீட்டின் அறையொன்றில் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.

நிஷாந்தி ஹேமலதா (30), ஹன்சக பிரபோதனி (10) மற்றும் வினுஜ நவோத ஜயரத்ன (5) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

வீடு தீப்பிடித்து எரிந்ததில் தாயும் இரண்டு குழந்தைகளும் படுத்த படுக்கையிலேயே உயிரிழந்தனர்

இச்சம்பவத்தில் குடும்பத்தலைவரான முப்பத்தெட்டு வயதான சமந்த ஜயரத்ன என்ற முன்னாள் இராணுவ சிப்பாய் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானார்.

தீக்காயமடைந்த கணவர் நேற்று முன்தினம் (26) மாலை தனது முச்சக்கரவண்டியின் தாங்கியில் இருந்த பெற்றோலை, போத்தலில் நிரப்பி அறையிலுள்ள படுக்கைக்கு அடியில் வைத்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்த படுக்கையிலேயே தாயும், இரண்டு பிள்ளைகளும் கடைசியாக தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

இதனிடையே, தீப்பற்றி எரிந்த வீட்டிற்கு, பக்கத்து வீட்டில் இருந்து சட்டவிரோதமாக மின்சாரம் பெறப்பட்டுள்ளது.

வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில், இதய நோயாளி எனக் கூறப்படும் கணவர், தூங்குவதற்கு மருந்து சாப்பிட்டுவிட்டு, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் தூங்கும் அறையை ஒட்டிய அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

இரவு 11.30 மணியளவில் அக்கம் பக்கத்து வீட்டு உரிமையாளர் உள்ளிட்ட சிலர், தீ விபத்தை பார்த்தனர்.பின்னர் தீயை அணைக்க உதவுமாறு வீட்டு உரிமையாளரின் அலறல் சத்தம் கேட்டது. வீட்டின் உரிமையாளர் விழித்துக்கொண்டதும், தீயில் எரிந்து கொண்டிருந்த தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் காப்பாற்ற முயன்றார். அதனால் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

வீடு தீப்பிடித்து எரிந்ததில் தாயும் இரண்டு குழந்தைகளும் படுத்த படுக்கையிலேயே உயிரிழந்தனர்.

தீ விபத்தில் உயிரிழந்த பத்து வயது சிறுமி ஹசங்க புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்றிருந்த நிலையில், அதற்கான பெறுபேறுகள் வெளியான அன்று இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.

சம்பவத்தில் தீக்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இரு பிள்ளைகளின் தந்தையான சமந்த ஜயரத்ன இராணுவத்தில் சில காலம் கடமையாற்றி  விட்டு, விலகி மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக அரசாங்கப் பரிசோதகர் திணைக்கள அதிகாரிகளை அழைக்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம படகு

east tamil

வெலே சுதா, மனைவிக்கு 8 வருட சிறைத்தண்டனை!

Pagetamil

தாயை மிரட்டி யுவதியை கடத்திய காதலன் கைது

east tamil

ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு வேண்டாம் – ஜோசப் ஸ்டாலின்

east tamil

‘இளம் பெண்களை நிர்வாணமாக்கி….’- வெளிநாட்டு வேலைக்கு சென்று திரும்பிய தமிழ் பெண் வெளியிட்ட அதிர்ச்சிக் கதைகள்!

Pagetamil

Leave a Comment