தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு இன்று (24) அறிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாக சபைக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தேர்தல் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார மற்றும் தலைவர் வஜிர அபேவர்தன ஆகியோர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாக சபை இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1