அரசியல் தலையீட்டை தொடர்ந்து யாழ் மாநகரசபை முதல்வராக இ.ஆர்னோல்ட் இன்று (21) பதவியேற்றார்.
நேற்று முன்தினம் (19) நடந்த யாழ் மாநகரசபை முதல்வர் தெரிவில் போதிய உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லையென தெரிவித்து, முதல்வர் தெரிவை ஒத்திவைப்பதாக உள்ளூராட்சி ஆணையாளர் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
இதை தொடர்ந்து இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரமுகர்கள் சிலர் ஆளுனரை தொடர்பு கொண்டு பேசியதாகவும், இதை தொடர்ந்து, உள்ளூராட்சி ஆணையாளரை அழைத்த ஆணையாளர், முடிவை மாற்றும்படி அழுத்தம் பிரயோகித்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
இந்த நிலையில், இன்று யாழ் மாநகர முதல்வராக இ.ஆனோல்ட் பதவியேற்றார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் முரண்பட தொடங்கிய பின்னர், ஆர்னோல்ட் முதல்வர் பதவியிலிருந்து வீழ்த்தப்பட்டார். அந்த சம்பவங்கள் பற்றி அப்போதே விலாவாரியாக செய்திகள் வெளியாகியிருந்தன. தற்போது, மீண்டும் எம்.ஏ.சுமந்திரனுடன் ஆனோல்ட் நெருக்கமாகியுள்ள நிலையில், மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.