ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இன்று தாக்கல் செய்தது.
இன்று (21) காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
யாழ் மாவட்டத்தின் சகல உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்புமனுக்கள் இதன்போது தாக்கல் செய்யப்பட்டன.
அதேவேளை, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தாக்கல் செய்துள்ளது.




