மனைவியின் 12 வயது சகோதரியை கர்ப்பமாக்கிய கணவருக்கு 39 வருட கடுங்காவல் தண்டனையும், 30,000 ரூபா அபராதமும், இரண்டரை இலட்சம் ரூபா நட்ட ஈடும் வழங்குமாறு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
திஸ்ஸமஹாராம பொலிஸ் எல்லையில் வசிக்கும் 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவி 14 வருடங்களுக்கு முன்னர்- 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி ஏற்பட்ட அவசர நிலை காரணமாக சத்திர சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது, இரண்டரை வயது குழந்தையை அவரது 12 வயது சகோதரி கவனித்துக் கொண்டிருந்தார்.
மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், சம்பந்தப்பட்ட நபர் பல சந்தர்ப்பங்களில் மனைவியின் சகோதரியை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார்.
பின்னர் சம்பவம் தொடர்பில் திஸ்ஸமஹாராம பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டு திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிரான பூர்வாங்க விசாரணையின் பின்னர், சட்டமா அதிபர் 15.02.2013 அன்று ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றில் 3 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்தார்.
அதன்படி, நேற்று முன்தினம் (18), வழக்கு முதலில் விசாரணைக்கு வந்தபோது, சந்தேக நபர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதி, சந்தேகநபருக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 13 வருடங்கள் வீதம் 3 குற்றச்சாட்டுகளுக்கு 39 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தார்.