26 C
Jaffna
January 10, 2025
Pagetamil
சினிமா

‘துணிவு’ படத்துடன் ஒப்பிடவில்லை: பாடலாசிரியர் விவேக்

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் உலக அளவில் ரூ.210 கோடிக்கும் மேல் வசூலித்து வரும் நிலையில், ‘இது துணிவு படத்துடன் ஒப்பிடும் பதிவல்ல’ என்று ட்விட்டரில் பாடலாசிரியர் விவேக் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த ‘வாரிசு’ படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. குடும்ப உறவுகளில் நிகழும் சிக்கல்களையும், தொழில் போட்டியையும் மையமாக கொண்டு உருவான இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார்.

இப்படத்தை தில்ராஜு தயாரித்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, யோகிபாபு, ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் நாள் இப்படம் ரூ.19.43 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், படம் உலக அளவில் 7 நாட்களில் ரூ.210 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக பாடலாசியர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில், “இது ‘துணிவு’ படத்துடன் ஒப்பிடும் பதிவல்ல. படமும், படக்குழுவும் சிறப்பாக இயங்க வாழ்த்துக்கள். ‘வாரிசு’ நன்றாக ஓடும் என்பது தெரிந்த உண்மை. ஆனால், அதன் ரிப்போர்ட்டுக்காக காத்திருந்தேன். தற்போது தெரிந்துவிட்டது. இப்போ போட்றா பிஜிஎம்’ஆ” என பதிவிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘த கோட்’ படத்தால் மன அழுத்தம்: நடிகை மீனாட்சி சவுத்ரி வருத்தம்

Pagetamil

நடிகை ஹனி ரோஸ் புகார் – கேரள தொழிலதிபர் கைது

Pagetamil

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

Pagetamil

வாழ்க்கையை சீரழித்து விட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்

Pagetamil

“நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை” – சிவகார்த்திகேயன்

Pagetamil

Leave a Comment